Thursday, March 21, 2013
Monday, September 3, 2012
Tuesday, July 24, 2012
புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
Assalamu Alaikum
Wish you all happly and blessed Ramadan - Ramadan Kareem. May Almighty Allah bless us to perform all 'ibadath' during the holy month and pray Him to accept our swalath, siyam khiyam and all deeds - Ameen.
அனைவருக்கும் எமது புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்.
Wednesday, April 18, 2012
Release of “Frontliners Book
Gopalaswami,IAS, Dr.Abdul Kalam’s Advisor- V.Ponraj, Actor Vivek visit Kuwait for Frontliners function
Frontliners Association, Kuwait is conducting a star-studded “National Integration and Grand Cultural Show’ on May 4, 2012 (Friday) at 6.00 PM at Al-Jeel Jadeed, School, Hawally. The highlight of the function will be the release of “Frontliners Book – series 16” by writer N.C.Mohandoss .
The book highlights the achievements and indominatable spirit displayed by people, especially those physically challenged, in facing the hurdles in their life and is expected to have an excellent motivational effect on its readers.
Three eminent persons with illustrious career will grace the occasion of the Book release. Mr.Gopalaswami, Former Chief Election Commissioner will be the Chief Guest. He is well-known and respected for following the highest standards of efficiency and probity in public administration throughout his distinguished career.
Mr.V.Ponraj , Scientist & Advisor to former President Dr.Abdul Kalam, is a key public figure whose recent tasks included the preparataion of “Koodankulam Report” and conducting special training session for the MLAs after the Assembly election last year. Mr.Ponraj, who likes to propagate the great vision of Dr.Kalam “Mission – 2020” for India at all public forum will be a key speaker.
Mr.Vivek, the special guest for the evening - is a ‘Padma Shri’ awardee and a popular Tamil film Comedian know to south with a string of awards for his hilarious and stylish performances. He is known for thought-provoking social messages as a part of his comedy acts and would add sparkle and wit to the function.
The function also would have a number of super entertainment acts from Cine/TV artistes Raj Kamal, Aishwarya, Azarudeen, Shivani and Maggie. Local sangamam talent group would add to the variety.
For contact: 99816937 ,55483266, 97583490,65772012,99545296,99795136,99588618
Monday, April 2, 2012
மாபெரும் பொருளாதார மேம்பாட்டு மாநாடு CONFERENCE ON SELF-RELIANCE 06/04/2012.


17ஆம் ஆண்டின் பேரவையின் சிறப்பு நிகழ்ச்சியாக பயன்மிக்க நிகழ்வாக புலம் பெயர்ந்து வாழும் நம் சமுதாயத்தவர்களின் எதிர்கால பயம் போக்க ... சுயத் தொழிலில் நாம்முன்னேற்றமடைய புதிய சிந்தனையோடு பேரவை ஏற்பாடு செய்திருக்கும்....
Wednesday, March 14, 2012
Thursday, February 16, 2012
Tuesday, January 31, 2012
TMCA hosted Reception to MISK Guests






Tamilnadu Muslim Cultural Association (TMCA), Kuwait accorded warm reception on Saturday, the 28th January, 2012 at Tabaq Pakistani Restaurant, Murgab to the dignitaries Janab Abdul Kader, Professor and Head, Department of Tamil, Vaniyambadi Islamiya College (one of TMCA’s special invitees during its 10th Anniversary – May, 2005) and Moulana Moulvi Mufti Muhammad Rizvi (bin-noori) from Sri Lanka who visited Kuwait at the invitation of Majlis Ihya’a Sunnah, Kuwait (MISK), to participate in Seerat-un-Nabi grand Islamic Cultural Conference held a day before.
The meeting presided-over by TMCA President, Br. Basheer Ahamed.
Leaders of TMCA, honoured visiting dignitaries as follows:
With Ponnadai (Shawl)
Janab. M.A.J. Mohamed Iqbal to Prof. Janab. Abdul Kader
Janab. . Jamal Jaffar to Moulvi. Mufti Muhammad Rizvi
TMCA’s Souvenir of past mega events – Conference on ‘Inter-faith Unity and Humanity’, 15th Anniversary and Special edition on Umrah Pilgrimage
Janab. ‘Jahra’ Mohd Iqbal to Prof. Janab Abdul Kader
Janab. I. Zahiruddin to Moulvi. Mufti Muhammad Rizvi
Guests delivered special address during the event highlighting on various topics which are in need of the hour appreciating TMCA’s responsible services being rendered to the community and stressing further to preserve our unity.
Br. Khaleel Rahuman, Assistant Treasurer-TMCA proposed vote of thanks and Dua recitation by Moulana Moulvi Abdul Latif Kazemi Hajrath Qibla, Founder President - MISK. Icon of TMCA, Br. S.M. Arif Maricar – its Media and Public Relations Secretary compiled the whole program with enthusiasm and high spirit. Special Lunch was served at the end.
News and Picture compiled by:
Karaikkal S.M. Arif Maricar and Swamimalai H. Jahir Hussain
To view more Images;
http://www.facebook.com/media/set/?set=a.296646223717410.66527.100001161044568&type=1
Friday, January 27, 2012
M.O.H. Farooq Maraicar Passed Away

முன்னாள் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் இந்திய நேரப்படி இன்று இரவு 9:15க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் إنا لله وإنا إليه راجعون
அவர்களின் நல்லடக்கம் இன்ஷா-அல்லாஹ் பாண்டிச்சேரியில் முழு அரசு மரியாதையுடன் நடக்க இருக்கிறது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)”
29:57
Every soul will taste death. Then to Us will you be returned.
Profile of Late M.O.H. Farooq.
Born on 6th September 1937 at Karaikal (Pondichery), B.A. (Economics) at Loyola College, Chennai. He was appointed as the Indian Ambassador to Saudi Arabia in September 2004. In 2010, Farook was appointed as Governor of Jharkhand. He was appointed as Governor of Kerala on August 25, 2011. He is a Political and Social worker. He was a member, Pondichery Legislative Assembly from 1964-91 and also a Speaker, Legislative Assembly from 1964-67 and also 1980-85.
He was the Chief Minister of Pondichery during the period 1967-68, 1969-74 & 1985-90. He was also the Leader of opposition, Pondichery Legislative Assembly from March to December 1990. In 1991, he was elected to the Indian Parliament (Lok Sabha). He also served as a Union Minister of State for Civil Aviation and Tourism from June 1991 to December 1992. He was re-elected to the Parliament in 1996 and also in 1999.
He also held several other positions such as a member of Central Haj Committee, Mumbai (1975-2000), Public Accounts Committee of Parliament of India, Member of Parliamentary Standing Committee on Home Affairs, Member of Committee on Wakf Laws, Member, Joint Committee to enquire into Irregularities in Securities and Banking Transactions, Member Consultative Committee on Ministry of Science and Technology, Member, Committee on Members of Parliament, Local Area Development Scheme.
His special interests are Books, Women Welfare and Upliftment of the downtrodden. His favourite pastime and recreation are reading, sports, social work and horticulture. He visited many countries like Australia, France, Malaysia, Saudi Arabia, Syria, UK, USA and erstwhile USSR. He also attended world Tamil conference at Paris in 1970, Disarmament conference at Vienna, Seminar at Fletcher School of Law and Diplomacy, Harvard University, USA, Deputy Leader and Leader, Hajj Goodwill Delegation in 1987 and 1989 respectively. Visited Syria in 1991 for signing a protocol on tourism. He participated in struggle for liberation of Pondichery as a student during 1953-54 when Pondichery was a French colony.
Thursday, January 26, 2012
Monday, January 23, 2012
K-Tic: குவைத்தில் மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) மாநாடு!

7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!
பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ மற்றும்
அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.A., M.P., ஆகியோர் சிறப்புரை!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், பிப்ரவரி (2012) மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்...
தொடர்ந்து....
2 சிறப்பு விருந்தினர்கள்!
3 நாட்கள்!
4 இடங்கள்!
சிறப்புப் சொற்பொழிவுகள்!
குவைத்தில் முதல் முறையாக இஸ்லாமிய பட்டிமன்றம்!
ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!
முஸ்லிம் அல்லாதோருக்கான சிறப்பு நிகழ்ச்சி!
குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துரைகள்!
குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின் சிறப்புக் கருத்தரங்கம்!
பிற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துரைகள்!
பரிசளிப்பு நிகழ்ச்சி!
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.
நிகழ்ச்சியின் முழு விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
-------------------------------------------------------------------------------------------------------
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82
Flag Hoisting Ceremony at Indian Embassy Kuwait for the Republic Day

On the occasion of the Republic Day of India, a Flag Hoisting Ceremony will be held at the Embassy of India premises at 9.00 A.M. on Thursday, January 26, 2012. This will be followed by the reading of the message of Hon’ble President of India by the Ambassador, singing of patriotic songs by Indian children, and an Open House Reception. All Indian nationals in Kuwait are cordially invited to attend the Ceremony.
Thursday, January 19, 2012
தமிழர் சந்தை - உலக தமிழர்களின் இலவச சந்தை

* தமிழ் நிகழ்ச்சிகள் அறிவிக்க
* வீடுகள் விற்பனை & வீடுகள் வாடகைக்கு
* பொருட்கள் வாங்க & விற்க - அனைத்தும் ஒரே இடத்தில்
* மேலும் பல – இலவச சேவைகள்
Australia - Bahrain - Canada - Denmark - France - Germany - Malaysia - Mauritius- India - Kuwait - Norway - Qatar - Saudi Arabia - Sri Lanka - Switzerland - Taiwan - UAE - UK - USA
Tuesday, January 3, 2012
குவைத் தமிழ் மாத இதழ் 7ஆம் ஆண்டு துவக்க விழா.





குவைத் தமிழ் 7-ம் ஆண்டு துவக்க விழா
( அரபு உலகின் முதல் தமிழ் இதழ் )
30-12-2011 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் டீச்சர் சொசயிட்டிஹால் தஸ்மா
குவைத் தமிழ் 7-ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆலோசகர் நாசர் ரப்பானி அவர்கள் கிராஆத் ( திருமறைவசனம் ) ஒதி விழாவை தொடங்கி வைத்தார்.
தமிழ் பத்திரிக்கை நிறுவனர் K. லுக்மான் சித்திக் அவர்கள் தனது வரவேற்புரையில்.. தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு பேச்சாளர்களையும், குவைத் வாழ் தமிழ் பொது மக்கள், வர்த்தக பெருமக்கள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோரை பொங்கு தமிழில் வரவேற்றார்.
கருத்துரை வழங்கிய கம்பளிபஷீர் அவர்கள் இப்பத்திரிக்கையின் தொடர்வளர்ச்சிக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வர வேண்டும் என கேட்டுகொண்டார்.
TVS குழுமம் மேலாளர் அலாவுதின் அவர்கள், தாயகத்திலிருந்து வருகை புரிந்த முக்கிய பேச்சாளர்களை வரவேற்று மேடையில் அமர செய்தார்.
தொடர்ந்து, குடிசைகள் எப்போது கோபுரங்களாகும்? (கவிதைகள்) எனும் நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரிநாரயணன் Ex.MLA. வெளியிட முக்கிய விருந்தினர்கள் TKS. இளங்கோவன் M.P., பேராசிரியர்அப்துல்லாஹ், பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர்க்கு குவைத் தமிழ் பத்திரிக்கையின் இணையாசிரியர் அறிவிகவிஞர் ஆனந்தரவி அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்
(கவிதைகள்) நூல் குறித்த தனது கருத்துரையில், மிகசிலாகித்து, பாராட்டி வாழ்த்தி பேசினார். தமிலோசை மன்றத்தின் புரவலர் அல் அவ்தா கார்பெண்ட் தொழிலதிபர் சாதிக் அவர்கள்
தொடர்ந்து, குவைத் தமிழ் பத்திரிக்கை குழுமத்தினரால் முக்கிய விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட்டனர்.
பத்திரிக்கை ஆசிரியர். A.அப்துல்கனி (ஜானி) அவர்கள் அழைப்பு விடுக்க “சமூக புரட்சி ” என்ற தலைப்பில் அச்சரப்பாக்கம் சட்ட்மன்ற உறுப்பினர் சங்கரி நாரயணனன் Ex.MLA பேரீய விளக்க உரையாற்றினார்
குவைத் தமிழ் பத்திரிக்கைவெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் TKS. இளங்கோவன் M.P. அவர்கள். முக்கியவிருந்தினர்கள் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து,வர்த்தக பெருமக்களுக்கும்,ஸ்பான்சர்களுக்கும் நினைவு பேழைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து,“தொண்டுச் செம்மல்”எனும் பட்டத்தையும் உடன் அதற்க்கான நினைவுபேழையையும் கம்பளி A.M.பஷீர் அவர்களுக்கு TKS. இளங்கோவன் M.P., பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ், ஆகியோர் இணைந்து வழங்கி கெளரவித்தனர்.
“இயக்கங்கள்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் TKS. இளங்கோவன் M.P. சிறைப்புரையாற்றினார்.
“தொலைகாட்சி ஊடகம் இன்றைய நிலையில் அவசியமா ?” குறித்த தலைப்பில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் பேரூரையாற்றினார்.
முன்னதாக காரைக்கால் S.M. ஆஃரிப் மரைக்காயர் அவர்கள்,வருகை புரிந்த அணைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மக்கள் தொடர்பாளர் M.செளக்கத் அலி அழைக்க “ஒற்றுமை”எனும் தலைப்பில் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ், அவர்கள் நீண்ட நிறைவுரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியினை தனேக்கே உரித்தான எழில் கொஞ்சும் தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கி குவைத் தமிழ் பத்திரிக்கை விழாவுக்கு சிறப்பு சேர்த்து உதவினார் சகோதரர் விட்டுக்கட்டி எம்.எஸ்.எச். மஸ்தான் அவர்கள்,
இந்நிகழ்வு சிறப்பு சேர்க்கும் வகையில் ஊடகசெய்தி வெளீயிடு மற்றும் புகைப்படத்தொகுப்புக்கு, பெரிதும் உதவினர் S.M. ஆஃரிப் மரைக்காயர் அவர்கள்
இச்சிறப்பு நிகழ்வுக்கு மார்க்க மற்றும் சமுதாயநல அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள்,வர்த்தக பெருமக்கள், சமூக நல ஆர்வலர்கள், பொது மக்கள் மிக திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
http://www.facebook.com/media/set/?set=a.279386942110005.63155.100001161044568&type=1
Saturday, December 31, 2011
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் 567 காலி பணியிடங்கள்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் (புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம்) உள்ள 567 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் கீழ் 400 இளநிலை எழுத்தர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
புதுச்சேரி அரசின் கணக்குகள் மற்றும் கருவூலத்துறையின் கீழ் 115 பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 நிலையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
நீதித்துறையில் இளநிலை எழுத்தர் 28 பணியிடங்களும், 24 தட்டச்சர் பணியிடங்களும் நிரப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்கள் அனைத்தும் பொது போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
அ. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி
ஆ. பாலிடெக்னிக் வகுப்பில் தேர்ச்சி - பத்தாம் வகுப்பிற்கு பிறகு.
இ. பாலிடெக்னிக் வகுப்பில் தேர்ச்சி - பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு.
இதை தவிர டைப் ரைட்டிங் தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கில் LOWER பிரிவில் தேர்ச்சி.
குறிப்பு : பண்டகக் காப்பாளர்கள் - கிரேடு 3 மற்றும் இளநிலை எழுத்தர் ஆகிய பணிக்கு டைப் ரைடிங் தேர்ச்சி தேவை இல்லை.
வயது வரம்பு :
பொது : 32 வயது
OBC/BCM/EBC/SC/ST/BT/MBC - 35 வயது
விண்ணப்பிப்பது எப்படி:
விண்ணப்பதாரர்கள் 14.12.2011 முதல் 13.1.2012-க்குள் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கான இணையதள முகவரி :
www.pon.nic.in, http://dpar.puducherry.gov.in/, https://recruitment.puducherry.gov.in/
விண்ணப்பிக்கும் முன்பாக, தனது வண்ண புகைப்படத்தினை (பாஸ்போர்ட் சைஜ்) (Background - White இன் கலர்) 25 K க்கு குறைவான அளவிலும், தன்னுடைய கையெழுத்தினை 10 K க்கு குறைவான அளவிலும் ஸ்கேன் செய்து வைத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏற்றம் செய்ய வேண்டியது இருக்கும்.
மேலும் ஆன்லைனில் பூர்த்தி செய்து சப்மிட் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஒரு A 4 தாளில் முன்னும் பின்னுமாக பிரின்டவுட் செய்து, தனது கையெழுத்தினை போட்டு 23.1.2012-க்குள் சம்மந்தப்பட்ட துறைக்கு ரிஜிஸ்தர் போஸ்ட் மூலமோ அல்லது சாதாரண தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிப்போர் ஆன்-லைன் விண்ணப்பத்தில் எந்தப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என்று வரிசைப்படுத்தி பூர்த்தி செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கூடாது.
அரசு துறைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோர் தங்கள் துறையின் தலைவர் மூலம் 23.1.2012-க்குள் விண்ணப்பங்களை மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு அனுப்ப வேண்டும்.
இட ஒதிக்கீடு : முஸ்லீம்களுக்கென அரசாங்கம் 2 % இடத்தினை ஒதிக்கீடு செய்துள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கட்டாயம் BCM என்ற சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பெற்று வேலை வாய்ப்புத் துறையில் பதிய வேண்டும். ஏற்கனவே OBC என பதிந்தவர்களும் கட்டாயம் BCM என்று மீண்டும் சான்றிதழ் பெற்று பதிய வேண்டும்.
இந்த பொது போட்டி தேர்வில் எழுதில் வெற்றி பெற காரைக்கால் வேலைவாய்ப்பு துறையின் மூலம் கோச்சிங் கிளாஸ் நடத்தப்பட உள்ளது. மிக குறைந்த நபர்களுக்கு மட்டுமே கோச்சிங் கிளாஸ் நடத்த இருப்பதால் ஒரு சிறிய போட்டி தேர்வு வைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்க்கான விண்ணப்பங்களை காரைக்கால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. சிறிய போட்டித் தேர்வு வரும் 27.12.2011 அன்று நடைபெற உள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் நடைபெறும். அதற்கான தேதி, தேர்வு மையம் போன்றவை பின்னர் அறிவிக்கப்படும்.
உதவிக்கு: இது தொடர்பாக எதாவது சந்தேகங்கள் இருந்தால் எல்லா வேலை நாள்களிலும் காலை 9.30 முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0413- 2233215.
Friday, December 30, 2011
குவைத்தமிழ்7-ம்ஆண்டுதுவக்க (முன்னோட்ட) வரவேற்புநிகழ்வு: :

Kuwait Tamil Chief Guest Professor Dr. Abdullah, Professor Subaverapandian,
T.K.S. Elangovan M.A. M.P. Member of Parliament & Shankari Narayanan M.A.,
Acharapakkam Ex, M.L.A., Reception was held on 29/12/2011 @ Anjappar Restaurant Farwaniya Kuwait @ 8.30PM.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
குவைத்தமிழ்7-ம்ஆண்டுதுவக்க(முன்னோட்ட)வரவேற்புநிகழ்வு:
29-12-2011 வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் ஆஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட் ( ஃபர்வானியா ) யில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வுக்கு TMCA பேரவை தலைவர்,மற்றும் சமுதாயநல அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், வர்த்தக பெருமக்கள், சமூக நல ஆர்வலர்கள், முன்னிலை வகித்தனர்.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்ட். A.அப்துல்கனி (ஜானி) அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் TKS. இளங்கோவன் M.P. அவர்களுக்கு,பூங்கொத்து வழங்கி கெளரவித்து முன்னிருக்கையில் அமரவைத்தார்.தொடர்ந்து,பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு, TMCA பேரவை தலைவர் ஆவூர் A. பஷீர் அஹமது அவர்களும், குவைத் தமிழ் மக்கள் தொடர்பாளர் M.செளக்கத் அலி அவர்கள்,பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு, குவைத் தமிழ் பத்திரிக்கை நிறுவனர்& வடிவமைப்பபாளர்K. லுக்மான் அவர்கள், அச்சரப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரிநாரயணன் Ex.MLA. ஆகியோர்க்கும் பூங்கொத்து வழங்கி கெளரவித்து முன்னிருக்கையில் அமரவைத்தனர்.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆலோசகர் நாசர் ரப்பானி அவர்கள் கிராஆத்( திருமறைவசனம் ) ஒதி தொடங்கி வைத்தார். குவைத் தமிழ் பத்திரிக்கை நிறுவனர் K. லுக்மான் சித்திக்அவர்கள் தனது வரவேற்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு பேச்சாளர்களையும் ஏனைய அழைப்பாளர் களையும் உவகைப் பொங்க வரவேற்றார்.
வருகை புரிந்த முக்கிய சிறப்பு பேச்சாளர்கள் நால்வரும், தங்களது கருத்துரையின் போது, குவைத் தமிழ் பத்திரிக்கை அரபுலகின் முதல் தமிழ் இதழாக துவங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக வெளியிட்டு வருவதுடன் குவைத் தமிழ் பேசும் மக்களிடையே நல்ல தமிழ்உணர்வுகளை பதித்து,தமிழக நன்னெறி செய்திகளுடன் ‘குவைத் தமிழ்’ தாங்கி வருவதையும் அதற்கு காரணமான நிர்வாகிகளை மனம் திறந்து வெகுவாக பாராட்டியதுடன்,தங்களது வாழ்த்துக்களை முன்னதாக தெரிவித்துக்கொண்டும், இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள வர்த்தக நிறுவனத்தார்கள், வாசகர்கபெருமக்கள் பெரிதும் தங்களது ஒத்துழைப்பினை இப் பத்திரிக்கைக்கு தொடர்ந்து
வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் A. அப்துல்கனி (ஜானி) அனைவருக்கும் நன்றி கூறினார். மக்கள் தொடர்பாளர் M.செளக்கத் அலி அவர்கள் மஜ்லிஸ் துஆ செய்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
இவ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சிறப்பு சேர்த்து உதவினார்கம்பளி A.M.பஷிர்அவர்கள், இரவு உணவு உபசரிப்புக்கு பின்னர் இம்முன்னோட்ட நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
நன்றிக்கு உரியவகையில், இவ் நிகழ்ச்சியினைசிறப்பாக ஏற்பாடு செய்து உதவினார் குவைத் தமிழ் பத்திரிக்கையின் இணையாசிரியர் அறிவுக்கவி ஆனந்தரவி அவர்கள். இந்நிகழ்வு சிறப்பு சேர்க்கும் வகையில் செய்தி மற்றும் புகைப்படத்தொகுப்புக்கு, பெரிதும் உதவினர் TMCA செய்தி தொடர்பாளர் காரைக்கால் S.M. ஆஃரிப்மரைக்காயர் அவர்கள் மற்றும் TMCA பொருளாளர் சுவாமிமலை H.ஜாஹீர் ஹூசைன் அவர்கள்..
http://www.facebook.com/media/set/?set=a.278836995498333.62983.100001161044568&type=3










