Monday, January 23, 2012

K-Tic: குவைத்தில் மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) மாநாடு!


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்
7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!
பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ மற்றும்
அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.A., M.P., ஆகியோர் சிறப்புரை!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், பிப்ரவரி (2012) மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்...

தொடர்ந்து....
2 சிறப்பு விருந்தினர்கள்!
3 நாட்கள்!
4 இடங்கள்!
சிறப்புப் சொற்பொழிவுகள்!
குவைத்தில் முதல் முறையாக இஸ்லாமிய பட்டிமன்றம்!
ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!
முஸ்லிம் அல்லாதோருக்கான சிறப்பு நிகழ்ச்சி!
குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துரைகள்!
குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின் சிறப்புக் கருத்தரங்கம்!
பிற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துரைகள்!
பரிசளிப்பு நிகழ்ச்சி!
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.

நிகழ்ச்சியின் முழு விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன.



தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
-------------------------------------------------------------------------------------------------------
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82

No comments: