Monday, October 10, 2011

காயிதே மில்லத் பேரவை குவைத்.


http://www.facebook.com/media/set/?set=a.238580066190693.55498.100001161044568&type=1

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

காயிதே மில்லத் பேரவை குவைத்.
குவைத்.
பேரவையின் செயற்குழுக்கூட்டம்
நிகழ்ச்சி:06-10-11இரவு 8:30 மன்சால்வா ஹோட்டல் முர்காப்
=====================================================

கடந்த 06-10-2011 வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில்: மன்சால்வா (முர்காப்) ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச் சிறப்புநிகழ்வுக்கு பேரவை தலைவர் ஜனாப் R.M.முஹம்மதுபாருக் தலைமை தாங்கினார்.

மார்க்க பிரிவு குழுஉறுப்பினர் நாசர் ரப்பானி அவர்கள் கிராஆத் - ( திருமறைவசனம் ) ஒதி தொடங்கி வைத்தார். சத்திரமனை ஹஸன் முஹம்மது அனைவரையும் வரவேற்று பேசினார் பேரவை துணைபொதுச் செயலாளார் -தலைவர் ஜனாப் திருமங்லகுடி அப்துற்ரஹீம் அவர்கள் தனது துவக்க உரையில் பேரவையின்வளர்ச்சிக்கு அனவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுகோள் விடுத்தார் கருத்துரை வழங்கிய நாசர் ரப்பானி ஆலிம் அவர்கள் முஸ்லிம்லீக் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மீடியா துறையில் அதிககவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலிவுறுத்தினார். பேரவை உறுப்பினர் எருமைப்பட்டி கலீல் ரஹ்மான் அவர்கள்,தனது பேச்சில், முஸ்லீம்லீக் தனது மகத்தான சேவகளை வெளியிடுவதில்லை என தனது வருத்தை கூறியதுடன் சாதனைகளை வெளிக்கொணர ஆக்கபூர்வமாக செயல்படவேண்டு என்றார். பெயருக்காக இல்லாது உணர்வுபூர்வமாக இந்த இயக்கத்தை நேசித்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வளர்க்க முன் வர வேண்டும் என்றார் பேரவை உறுப்பினர் திருமங்கலகுடி நூருல் அமீன் அவர்கள் தமது சொந்த வேலைகளுக்கிடையே இங்கு பொதுசேவையில் ஈடுபடுவதின் உரியபலன் தாயகத்தில்குறிப்பாக,நம்தமிழகத்தில்உரிமைகளை பெற முஸ்லிம்லீக் மூலமேபெறமுடியும் அதற்காகஅனைவரும் முன்வரவேண்டும்எனவலியுறுத்தினார்.
TMCA பேரவை தலைவரும் QMFK பேரவையின் உறுப்பினரும்ஆகிய ஜனாப் ஆவூர்.A.பஷீர் அஹமது அவர்கள் தனதுரையில்,நீண்டபாரம்பரியமிக்க இவ்வியக்கம் இன்னும் வளர்கிற அமைப்பியிலிருந்து மாறி வளர்ந்து விட்ட இயக்கமாகவும், காயிதேமில்லத் அவர்களை போன்று, துணிவான முடிவுகளின் மூலம் நல்ல பல நிலைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -ம், சமுதாயமும் அடையவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி வலியுறுத்தினார்.

பேரவை செய்தி தொடர்பாளர் ஜனாப் கம்பளி பஷிர் அவர்கள், காயிதேமில்லத்அவர்களையும், அவர்களது தோழர்கள் இயக்க தொண்டர்கள்யின் தியாகங்களை நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். மேலும், அவர்கள் வழி நின்று, முஸ்லிம் லீக் வழியாக மாத்திரமே சமுதாயத்திற்கு நற்சேவைகளை கொண்டு செல்வருவதற்கு சரியான களமாக இருக்கமுடியும்., ஆகவே இந்தஇயக்கத்தினை வளர வாழ செய்ய அனைவரும் ஒன்றுபட்டு இக்லாஸூடன் பாடுபட முன் வருவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

காயிதே மில்லத் பேரவை உறுப்பினர்அடையாள அட்டைகளை பேரவை தலைவர் ஜனாப் R.M.முஹம்மதுபாருக் அவர்களும், தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம்கலாச்சாரப் பேரவை தலைவர் ஜனாப் ஆவூர்.A.பஷீர்அஹமது அவர்கள்,ஜனாப்கம்பளி பஷீர் செயலாளர் அப்துற்ரஹீம் ஆகியோர் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கி கெளரவித்தனர் காயிதே மில்லத் பேரவை தலைவர் R.M.முஹம்மதுபாருக் அவர்கள், புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன், கடந்த சட்டசபை தேர்தலில் நடந்த கசப்பான சம்பவங்களை வருத்ததுடன் பகிர்ந்து கொண்ட அவர் உள்ளாட்சி தேர்தலில் தனி சின்னம், தனித்து போட்டி என்ற இயக்க தலைவர்கள் முடிவு நல்ல தொடக்கம் என்றார் இதன் மூலம் முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் மகத்தான வெற்றிகளை பெற பல சாதனைகளை பெற. முஸ்லீம் லீக் தாய்சபையில் அனைவரும் இணைந்துபபடுபட வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு.,அவர்களுக்கு அங்குள்ள (ஊரில்) சுற்றமும்,நட்பும் வாக்களிக்க வேண்டி இங்குள்ளவர்கள் அறிவுறுத்துமாறு கேட்டு கொண்டார் உறுப்பினர் அடையாள அட்டைகளை முறையாக கொண்டு வந்து சேர்க்க பாடுபட்ட பேரவை பொருளாளர் காரைக்கால் ஜனாப் S.M.ஆரிப்மரைக்காயர் அவர்களுக்கு பேரவை சார்பாக நன்றி கூறினார்.

பொருளாளர் காரைக்கால் ஜனாப் S.M.ஆஃரிப் மரைக்காயர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்

பேரவை தலைவர் அவர்கள் மஜ்லிஸ் துஆ செய்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

பேரவை உறுப்பினர் கோட்டக்குப்பம் ஜனாப் ஹபிப்ரஹ்மான் அவர்கள் இந் இந்நிகழ்ச்சி அனைத்து யினையும் தொகுத்து வழங்கி சிறப்பு சேர்த்து உதவினார்.

இரவு உணவு உபசரிப்புக்கு பின்னர் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

No comments: