Monday, October 10, 2011

காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு ஐ.எஸ்.ஓ 9001, 14001 மற்றும் ஓ.எச்.எஸ்.ஏ.எஸ்-18001 சான்றிதழ் 2011-ம் ஆண்டின் சிறந்த துறைமுக விருது: மார்க் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி தகவல்



காரைக்கால்,அக்.10 . தென்கிழக்கு கடற்கரையில் மிக நேர்த்தியான துறைமுகமாக விளங்கி வரும் காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு, ஐ.எஸ்.ஓ 9001, ஐ.எஸ்.ஓ 14001 மற்றும் ஓ.எச்.எஸ்.ஏ.எஸ்.-18001 சான்றிதழும், 2011-ம் ஆண்டின் சிறந்த துறைமுகம் விருதும் கிடைத்துள்ளது என மார்க் துறைமுக தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி தெரிவித்தார்.

இது குறித்து மார்க் துறைமுக தலைவர் ஜி.ஆர்.கே.ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 680 கி.மீ நீள கடற்கரை பகுதியில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இடையே மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரே ஆழ்நீர் துறைமுகமாகவும், அனைத்து தட்பவெட்ப நிலைகளிலும் இயங்கக்கூடிய மற்றும் பன்முக சரக்குகளை கையாள்கிற ஒரே துறைமுகமாக காரைக்கால் துறைமுகம் விளங்குகிறது.

சமீபத்தில் ரூ.200 கோடி மூலதன முதலீடு கிடைத்ததை தொடர்ந்து, 28 எம்எம்டிபிஏ திறனை ஏதுவாக்குகின்ற நிலையை எட்டியுள்ளோம். இதன் மூலம் நிலக்கரி கையாள்வதற்கு முற்றிலும் எந்திரமயமாக்கப்பட்ட பெர்த்துகள், 16.5 மீட்டர் வரையிலான ஆழ வசதி, திரவ சரக்குகளை கையாள்கிற மேம்பட்ட திறன்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கான சிறப்பு சேமிப்பு கிடங்குகள் ஆகிய உட்பட, கப்பல்கள் நிற்பதற்கான 5 பெர்த்துகளை இத்துறைமுகம் பெற்றிருக்கும். 3 கட்ட பணிகளாக நடைபெற்று வரும் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகள் நிறைவையெட்டும் சமயத்தில் மொத்தம் 9 பெர்த் வசதிகளை கொண்டு, 2015-க்குள் 50 எம்எம்டிபிஏ அளவிற்கு சரக்குகளை கையாள்கிற திறனை துறைமுகம் கொண்டிருக்கும்.

தற்போது மார்க் துறைமுகமானது செலவு குறைவான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிற சிறப்பான துறைமுகமாக மாறி வருகிறது. அதுமட்டுமின்றி, நிலக்கரி, உரம், சிமெண்ட், கச்சா சர்க்கரை, திட்ட சரக்குகள், ஜிப்சம், கன்டெய்னர்கள், ஸ்டீல் பைப்புகள், ஸ்கிராப், பையில் அடைக்கப்பட்ட சர்க்கரை, கட்டுமான பொருட்கள் என பல்வேறு வகையின் கீழ் சரக்குகளை கையாள்வதன் வழியாக பன்முகத்திறனை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளது. கடந்த மார்ச் 12-ந் தேதி அன்று எம்.வி கிறிஸ்டியனானா என்ற கப்பலில் 55.912 மெட்ரிக் நிலக்கரியை இறக்கி புதிய சாதனையை படைத்துள்ளது. அதேபோன்று, துறைமுகத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்து வருகிறோம். எங்களின் சாதனையை பாராட்டி, ஐ.எஸ்.ஓ 9001, ஐ.எஸ்.ஓ 14001 மற்றும் ஓ.எச்.எஸ்.ஏ.எஸ்.-18001 சான்றிதழும், 2011-ம் ஆண்டின் சிறந்த துறைமுக விருதும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

No comments: