Monday, December 26, 2011

குவைத்: 30.12.2011 அன்று K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் முனைவர் அப்துல்லாஹ் சொற்பாழிவு.
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்" கொள்கை அடிப்படையில் முதல் முறையாக கடந்த 29.07.2011 முதல் குவைத், ஃகைத்தான் பகுதியில் அமைந்துள்ள மிக்தாத் பின் அம்ரு (ரழி) பள்ளிவாசலில் வாரந்தோறும் தமிழில் ஜும்ஆ ஃகுத்பாப் பேருரை நடைபெற்று வருவது தாங்கள் அனைவரும் அறிந்த செய்தி... அல்ஹம்து லில்லாஹ்...

அந்த அடிப்டையில் வாரந்தோறும் ஃகுத்பாவுக்கு வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதினால் வரக்கூடிய அனைவரும் மார்க்கத்தின் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக ஜும்ஆ ஃகுத்பாப் பேருரையுடன் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் நமது K-Tic ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டு வருகின்றது.

அந்த வகையில்... இன்ஷா அல்லாஹ்... வாரந்தோறும் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு...

1. சிறப்பு சொற்பாழிவுகள்... வாரந்தோறும் சங்கத்தின் உலமா பெருமக்கள் சமயம், சமூக கட்டமைப்பு, சமுதாய முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம் என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி.

2. வாரந்தோறும் வசந்தம்... ஒவ்வொரு வாரமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்குள் சரியான பதிலை நேரிடையாகவோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். வாரந்தோறும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்(நபிமொழி)கள் உள்ளே புதைந்து கிடைக்கும் துஆக்கள், திக்ருகள், வரலாற்று நாயகர்கள் போன்றவற்றை பொதுமக்கள் தாங்களாகவே தோண்டியெடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கும்.

3. வேலைவாய்ப்பு தகவல்கள் அறிவிப்பு

4. மரணச் செய்தி அறிவிப்பு.. குவைத்தில் மரணத்தைத் தழுவும் நம் சமுதாய சகோதர சகோதரிகள் குறித்த அறிவிப்பு

5. மரணமடைந்தவர்கள், நோயாளிகள், கடனாளிகள், அல்லல்படுவோர் போன்றோருக்கான சிறப்பு துஆ மஜ்லிஸ்.

வெள்ளிக்கிழமைகளின் பொன்னான நேரங்களை சமுதாய மக்கள் பயனடையும் முறையில் செலவழிக்க நமது சங்கம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றது இன்ஷா அல்லாஹ்...

குவைத்திற்கு வருகை தரும் ஆலிம் பெருமக்கள், அறிஞர்கள், சமூக நல ஆர்வலர்கள், சமுதயாச் சேவகர்கள், இஸ்லாமிய அழைப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரை கண்ணியப்படுத்தும் விதமாக ஜும்ஆவிற்கு பிறகு அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றது நமது K-Tic சங்கம்.

அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் குவைத்தில் நடைபெறவிருக்கும் குவைத் தமிழ் மாத இதழின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவிற்கு வருகை தரும் பிரபல மனநல ஆலோசகர் முனைவர் பேராசிரியர் அப்துல்லாஹ் (முன்னாள் பெரியார் தாசன்) அவர்களின் சிறப்பு சொற்பாழிவு எதிர்வரும் 30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் நடைபெற இருக்கின்றது.

அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!

பெண்களுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்திகளை எத்தி வைக்குமாறும், சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82

No comments: