
லிபியா குடியரசுத் தலைவர் கடாபிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் பாரிய அளவில் தலைதூக்கி உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அந்நாட்டு போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை “நான் எங்கும் தப்பி ஓடவில்லை. லிபியாவில்தான் இருக்கிறேன்” என்று அரச தொலைக்காட்சியில் கடாபி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “நான் வெளிநாட்டுக்குச் செல்ல மாட்டேன். எனது நாட்டில்தான் இருப்பேன். எனக்கு எதிராக சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். அதை மக்கள் நம்ப வேண்டாம். போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லையேல், லிபியா நகரின் தெருக்களில் ஏராளமானவர்களின் உடல்களை சேகரிக்க வேண்டிய நிலை இருக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், லிபியா குடியரசுத் தலைவர் கடாபிக்கு எச்ந்தர்ப்பத்திலும் அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்க இலங்கை தயாராக உள்ளதாக அதன் குடியரசுத் தலைவரும் இலட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தவருமான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ அறிவித்து உள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி லிபிய மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற வேளையில் மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு அறிவித்திருப்பது பலருக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது.
கடாபி 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வதிகார ஆட்சிபுரிந்துவருகிறார். 1969ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் இண்டிரிசின் ஆட்சியை கவிழ்த்து விட்டு, இராணுவ தலைவராக இருந்த கடாபி குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்றார்.
No comments:
Post a Comment