குவைத் அரசின் சிறப்பு கருணைக்கால அறிவிப்பு
அன்புடையீர்,
எதிர்வரும் மார்ச் மாத முதல் தேதி முதல் ஜூன் மாத கடைசி வரையிலான நான்கு மாத காலங்களுக்குள், இகாமா இல்லாது சட்டத்திற்கு புறம்பாக வசிப்பவர்கள், இகாமாவை முறைப்படுத்திக் கொள்ளவும் அல்லது எவ்வித அபராதத் தொகையுமின்றி குவைத்தை விட்டு வெளியேறவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாக செல்பவர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கு ஏற்ப, அவர்களது பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவாகாது எனவும் மற்றும் அவர்களது கைரேகைப் பதிவும் செய்யப்பட மாட்டாது எனவும் குவைத் நாட்டின் 'வெளிநாட்டவர்கள் முறைப்படுத்தும' தலைமைக்குழு-வின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் இலாகாவின் செயலர் மன்சூர் அல்-மன்சூர் அறிவித்திருப்பதாக அரபி செய்தித் தாள் ஒன்றில் இது குறித்த செய்தியை மேற்கோள் காட்டி இந்தியத் தூதரக இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத் வாழ் தமிழக அனைத்து சகோதர, சகோதரிகளும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்தியன் என்ற நற்பெயரை நிலைநிறுத்தும் பொருட்டு விரைந்து முறைப்படுத்திக் கொள்ளுமாறு பேரவை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாகம்.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை குவைத்.
Helplines 97649800 / 94420919
For more information : http://www.tmcaonline.com
No comments:
Post a Comment