Friday, April 22, 2011

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் ஐம்பெரும் காப்பியக் கலைவிழா !

















குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் தனது ஐந்தாம் ஆண்டு நிறைவாக 08.04.2011 வெள்ளிக்கிழமை மாலை கைத்தான் கார்மல் பள்ளி அரங்கத்தில் ஐம்பெரும் காப்பியக் கலைவிழா சீரும் சிறப்புமாய் நடைபெற்றது.

குவைத்திற்கான இந்திய தூதர் மேதகு திரு. அஜய் மல்கோத்ரா தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழோசையின் குலவிளக்குகளாம் திருமதிகள் ஆனிபிரான்சிஸ், தேவிரவி, ஜான்சிராணி, ராணிமோகன், அமுதாகோபால் ஆகியோரால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழோசை பாடல் ஒலிக்க தமிழோசையின் துணைச்செயலாளர் திரு. அபுதாகீர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மங்களகரமாக விழா தொடங்கியது.

பரதாஞ்சலி நாட்டியப்பள்ளி குழந்தைகளின் அற்புத நடனம் கண்களை கவர்ந்தபோது தொடர்ச்சியாய் தமிழோசையின் சின்னக்குயில் செல்வி தெரசா அறங்கேற்றிய சிறுகுழந்தைகளின் நடனம் சேர்ந்தே சபையை சிலிர்க்க வைத்தது.

அரங்கம் நிறைந்த கரகோசத்துடன் டி.வி.எஸ் குழுமத்தின் மேலாளர் திரு. அலாவுதீன் அவர்கள் வரவேற்புரை வழங்க தமிழோசையின் தலைவர் திரு.உ.கு.சிவக்குமார் அவர்கள் தலைமையுரை யாற்றியவுடன் கொடையாளர் ஹாஜி. எஸ்.எம்.ஹைதர் அலியுடன் ஏனைய கொடையாளர்களும் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த‌ பேராசிரியர் முனைவர் சாருன் அவர்களுக்கு “இலக்கியச் சாரல்” என்ற பட்டமும், தமிழகத் திரைவானின் துருவ நட்சத்திரம் திரு. விமல் அவர்களுக்கு “இளைய கலை நிலா” என்ற பட்டமும், முன்னனி இயக்குனர் நகைச்சுவை நடிகர் திரு. தம்பி ராமையா அவர்களுக்கு நகைச்சுவை வேங்கை என்ற பட்டமும், மேதகு இந்தியத் தூதர் அவர்களால் வழங்கப்பட்டு, தமிழோசையின் கெளரவத்தலைவர் சாதிக் பாட்சா, மற்றும் ஆலோசகர் அட்லாஸ் அன்சாரி ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.

சிறப்பு நிகழ்வாக தமிழோசைக் கவிஞர் சீர்மிகு எழுத்தாளர் திரு. வித்யாசாகர் எழுதிய பத்து நூல்கள் மேதகு இந்திய தூதர் அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழோசையின் இசை வேந்தர் ஐயா பிரான்சிஸ் ஆசியுடன் மழலைச் செல்வங்களின் மாறுவேட நிகழ்ச்சி இந்திய தேசிய ஒற்றுமையை பறைசாற்றியது, இடையிடையே தமிழோசையின் இன்னிசைக் குயில்கள் கங்கேஷ், கணேஷ், சுப்பிரமணியன், கலிபுல்லா, ராணி மோகன், செல்வி தெரசா ஆகியோரின் இனிய பாடல்களுடன் இனிதே நடைபெற்ற விழாவில் முனைவர் குமார் அவர்கள் தமிழோசைக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முதன்மைக் கொடையாளர் திரு. ஹைதர் அலி அவர்களின் சிற்றுரைக்குப் பின் பொறியாளர் திரு.ப. சேகர் ஆங்கிலத்திலும் அதை தமிழிலும் உரை நிகழ்த்தி மேதகு இந்தியத் தூதரை உரையாற்ற வரவேற்றார். தமிழகத்தில் திக்கற்று வாழும் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி செய்யும் தமிழோசையின் சமுதாயப் பணியை பாராட்டிய மேதகு இந்தியத் தூதர் தூதரகத்தின் சேவைகளையும் அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் விளக்கி அற்புதமான‌ பேருரையை நிகழ்த்தினார்.

கவிஞர் யாக்கூப் அலி, கவிதாயினி அமுதாகோபால், கவிஞர் ஆனந்தரவி ஆகியோரின் தனிக்கவிதைகளின் தொடர்ச்சியாக தமிழோசையின் பைந்தமிழ் கவிஞர்கள் சாதிக் பாட்சா, கருங்குளம் சிவமணி, கவிசேகரன், கார்த்திகேயன், ஜான்சிராணி, தேவிரவி ஆகியோர் பங்கு பெற்ற கவியரங்கம் “இதயம் நனைந்த இரவுகள்” என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் சாருன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழோசையின் கண்ணியமிக்க பேராசிரியர் முனைவர் பால் மனுவேல் அவர்களால் பைந்தமிழில் வரவேற்கப்பட்டு பேராசிரியர் சாருன் தமிழா தமிழ் உனக்கு பகையா என்ற தலைப்பில் உரைப்போர் நிகழ்த்த தமிழகத் திரை வானின் இளைய நாயகன் விமல் கலைப்போருடன் கலந்துரையாட, திரைப்பட முன்னனி இயக்குனர் தம்பி ராமையாவின் நகைச்சுவை கலந்த நவரசப் பேச்சால் அரங்க மேடையை அதிரச் செய்தனர்.

மொத்தத்தில் இவ் ஐம்பெரும் காப்பியக் கலைவிழா சிறக்க அறிவுரை வழங்கிய பொறியாளர் செந்தமிழ் அரசு, தமிழோசையின் தன்னிகரில்லா பொருளாளர் அஜீஸ்சுதீன், ராஜசேகர், அன்பழகன், ஜோதி, சம்சுதீன், சேந்தைரவி, மற்றும் தமிழோசை குடும்பத்தினர் அனைவரும் ஆசி வழங்க தமிழோசையின் உயர்வுக்கு உறுதுணையாய் விளங்கும் வித்தகர் விட்டுக்கட்டி மஸ்தானின் நன்றி நவிலலுடன் நம் இந்தியத் தாயின் தேசிய கீதம் முழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

KUWAIT TAMIZHOSAI'S
"IYMPERUM KAAPPIYA KALAI VIZHA"


Kuwait Tamizhosai Poets Association has organized a spectacular, a jewel in crown mega cultural programme "IYMPERUM KAAPPIYA KALAI VIZHA" in commemoration of its Fifth Anniversary. The programme was held on 8th April 2011 at Carmel School, Al-Kaitan, Kuwait. His Excellency, the Indian Ambassador to Kuwait Shri. Ajay Malhotra was grace the function as Chief Guest. The programme was started with lighting the lamp by the eminent poetesses of Tamizlosai Mrs. Aani Francis, Devi Ravi, Jansirani, Rani Mohan and Amudha Gopal followed by the Tamilzhosai doctrine song. The secretary Mr. Abhu Thakeer was ably compeered the entire events. Mr. Allaudin, the Manager of T.V.S. Cargo, Kuwait welcomed the audience which include H.E. the Indian Ambassador, the main sponsor Haaji. S. M. Haider Ali, the co-sponsors and the special guests especially the popular Tami orator Dr. P. Saron, Loyola College, Chennai, the recent Kollywood sensation "Kazhavani Pugazh" Mr. Vimal and the dynamic director & popular actor Mr. Thambi Ramaiah and all the participants.

Drawing a huge wave of applause, the president of Tamizhosai Mr. U.K. Sivakumar delivered the presidential address followed by a glittering dance by the children of "Barathanjali" dance school. With her own choreography, The Tamizhosai's nightingale Miss. Terasa staged her first fantabulous dance programme using young children.

The glorious evening witnessed a spectacular music performance by the versatile musician of Tamizhosai Mr. Francis, singers Mrs. Rani Mohan, Mr. Ganesh, Mr. Gangesh, Mr. Kalifulla and Mr. Subramaniyan who regaled the audience with their cheerful, resonant and mellifluous voices with memorable cine songs. All the participants are enthusiastically witnessed the musical extravaganza. The audience was ecstatic and many in the back rows were seen dancing to the tunes and beats coming from the stage. The glittering dance for the song "Oru thaai makkal naam yenbom" by the school children captured the essence of Incredible India and focused the unity and integrity of India and it was an unforgettable cultural feast for all the participants.

In their felicitation addresses, the main sponsor Haaji. S. M. Haider Ali and the eminant scholars of Tamizhosai, Dr. Pal Manual, Dr. K. Kumar and Er. Senthamil Arasu who all were full of compliments for the services and achievements rendered by the Tamizhosai. While inviting the Ambassador to the stage, Er. P. Sekar recalled the Indian Ambassador's affectionate relationship with the Tamil people as his child-hood study begun in Ootty, Tamilnadu.

H.E. the Indian Ambassador Ajay Malhotra presented the memento to the all the sponsors and special guests. He addressed the gathering and praised the social services and generous financial support rendered by Tamizhosai to the downtrodden people in Tamilnadu. He released the souvenir of Tamizhosai and the ten books written by the prominent Tamil writer Mr. Vidhyasagar. He stated that the activities of the Tamizhosai were highly laudable and he assured of the support of the Indian Embassy for all social activities of Tamizhosai. The Ambassador also elaborated the Indian Embassy's assistance and support in terms of free air tickets to the Indian people those who want to exit from Kuwait by availing the prevailing amnesty period announced by the Kuwait Government.

A Highlight of the meeting was the 'Kaviarangam' entitled “Idayam Nirainth Iravukal" presided Prof. Sarun of Layola College, Chennai and participated by Mr. Saadik Bahsha, Karungulam Sivamani, Kavi sekaran, Karthikeyan, Jansi Rani and Devi Ravi. The poems were recited well received by all members. The special guest Prof. Sarun delivered his key note address entitled "Tamizha Tamil Oonakku Pahaiya". Prof. Sarun along with the Kollywood Cine hero Vimal and the most talented Director Thambi Ramaiah were able to effortlessly connect with the crowd with their humor and soul filling renditions.

The vote of thanks was ably delivered by Mr. Vittukatti Masthan of Tamizhosai. Never in the history of Kuwait Tamizhosai has such a lively and entertaining programme been witnessed.

for more images click the below link:

http://www.facebook.com/media/set/fbx/?set=a.175074005874633.37020.100001161044568&l=69f34f30ad

No comments: