Monday, October 4, 2010

(MISK) ஏற்பாடு செய்த பெண்களுக்கான (குடும்பத்தினர்) மாதாந்திர முதல் சிறப்பு நிகழ்ச்சி

மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் (MISK) ஏற்பாடு செய்த பெண்களுக்கான (குடும்பத்தினர்) மாதாந்திர முதல் சிறப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை 01.10.2010 அன்று ஃபர்வானியா பகுதியில் உள்ள மஜ்லிஸின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அப்துர் ரஜ்ஜாக் இல்லத்தில் இரவு 9:00 மணிமுதல் 11:30 மணிவரை நடைபெற்றது.

கண்ணியத்திற்குரிய மஜ்லிஸின் தலைவர் மவ்லவி அப்துல்லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு கூட்டத்தினை, மஜ்லிஸின் துணைத்தலைவர் டாக்டர் ஹாஜி ஷபியுல்லாஹ் அவர்கள் இறைவசனங்களை ஒதி துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மஜ்லிஸின் துணைச் செயலாளர் மவ்லானா மவ்லவி முஹம்மது அலி ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். மஜ்லிஸின் துணைப் பொதுச் செயலாளர் ஜனாப் முனீர் அஹமது அவர்கள் வரவேற்புடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இம்மஜ்லிஸின் கண்ணியத்திற்குரிய தலைவர் மவ்லானா மவ்லவி அப்துல் லத்தீப் காஸிமி ஹஜ்ரத் அவர்களும், துணைத்தலைவர் மவ்லானா மவ்லவி முஹம்மது அஜ்வத் ரைவின்தி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடுகளின் ஒவ்வொரு அம்சங்களிலும் பேண வேண்டிய மிக உயர்ந்த ஒழுக்கப்பண்புகளையும் நாகரீகங்களையும் இறைமறை, நபிவழி ஒளியில் விவரித்துக் கூறினார்கள். குறிப்பாக அன்னிய வீடுகளில் நாம் பிரவேசிக்க நேரிடின் நம்முடைய அணுகுமுறைகள் மற்றும் அவ்வீட்டில் நாம் இருக்கும் காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், படைத்த இறைவனுக்கான நம் கடமைகள், அடியார்களுக்கு நாம் செய்யும் கடமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினார்கள். மேலும் அடியார்களுக்கான கடமைகள் பரஸ்பர அன்றாட பழக்கவழக்கங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் காட்ட வேண்டிய பெருந்தன்மைகள், குறிப்பாக கணவன் மனைவி வாழ்வியல் நெறியில் விட்டுக் கொடுக்கும் பாங்கு, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பண்புகள் குறித்து அறிவித்துத் தந்தது பங்குபெற்றோர் வாழ்வில் பெரும் மாற்றங்களை இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்த வல்ல வகையில் அமைந்து இருந்தது.

ஒருங்கிணைப்பாளரான மவ்லானா மவ்லவி ஹாபிஸ் காரி சையத் அலி பாகவி ஹஜ்ரத் அவர்கள் இருசிறப்புரைகளிலிருந்தே ஒரு சில வினாக்களை தொகுத்து பெண்களிடம் கேட்டார்கள். பெண்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ள அதிக கவனம் மற்றும் இறைசிந்தனைகளையும் சொற்பொழிவுகளை முழுமையாக உள்வாங்கி அதன்படி அமல் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தும் முகமாக தொடுக்கப்பட்ட இவ்வினாக்களில் நல்ல முறையில் பதிலளித்த மூன்று இஸ்லாமிய சகோதரிகளுக்கு முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.

மஜ்லிஸின் காரியக்குழு உறுப்பினர் ஜனாப் ஷாஜஹான் ஹஜ்ரத் அவர்களின் துவாவுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்... குடும்பத்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய ஏறக்குறைய 100 நபர்கள் வரை கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

http://www.facebook.com/album.php?aid=21580&id=100001161044568&l=4ae9c352d3

No comments: