Sunday, October 24, 2010

மருத்துவக் காப்பீட்டு திட்டம் காரைக்காலில்


காரைக்கால்:மருத்துவக் காப்பீட்டு திட்டம் காரைக்காலில் விரைவில் துவக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் புதுச்சேரியிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தொடர் முயற்சி எடுத்தோம்.விடா முயற்சியால் இன்று அதற்கான அரசாணையைப் பெற்றுள்ளோம். முதல் கட்டமாக இத்திட்டம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

இதற்கு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு, ரேஷன் அட்டை ஒன்றுக்கு அரசு ரூ.968 செலுத்த உள்ளது.இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை மேல் சிகிச்சைக்காக பெற்றுக் கொள்ளலாம்.நோயாளிகள் அரசியல் சிபாரிசு இன்றி நேரடியாகவே சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் அல்லது அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெரிய மருத்துவமனைகள் ஏதேனும் ஒன்றில் சிகிச்சை பெறலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.


வெளிநாடு சென்றுள்ள புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் வல்Œராஜ் புதுச்சேரி திரும்பியவுடன், இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்தாகும். இத் திட்டம் காரைக்காலில் விரைவில் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு தந்த மாநில கவர்னர், முதல்வர், மத்திய திட்டத் துறை அமைச்சர், அமைச்சர்கள், மாநில காங்., தலைவர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் நாஜிம் கூறியுள்ளார்

No comments: