Tuesday, August 3, 2010

இரத்த தான முகாம்




குவைத் முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்
உதவும் கைகள்
இணைந்து நடத்திய சிறப்பு இரத்த தான முகாம்.

30. 07. 2010 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் குவைத் முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம் மற்றும்
உதவும் கைகள் அமைப்பும் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டது மகிழ்வாகவும், தமிழர்களின் பெருமையை எடுத்து கூறுவதாகவும் அமைந்தது.

இந்த சிறப்பு வாய்ந்த இரத்த தான முகாமை முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்ற தலைவர் திரு. ஜெயபாலன் அவர்களுடன் உதவும் கைகள் நிறுவனர் திரு. இராஜேந்திரன் அவர்களும் இணைந்து மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். இவர்களுக்கு உறுதுணையாக மன்ற செயலாளர் திரு.ஷேக்ஆதம், துணைத்தலைவர் திரு. நடராஜன், துணைச்செயலாளர்
திரு. மதிவாணன், மன்ற மக்கள் தொடர்பாளர் திரு. சேந்தை இரவீந்தர், மற்றும் திரு. இக்பால், திரு. முருகன் ஆகியோர் செயல்பட்டனர்.

தன்னார்வத் தொண்டர்களாக கலந்து கொணட திரு. ஜாகீருதீன், திரு.ஆரிப்மரைக்கயர், திரு. ஜாகீர் உசேன், திருமதி.ஆனிபிரான்சிஸ், திருமதி. தேவிரவி, பேராசிரியர் டாக்டர் பால்மனுவேல், திரு.கலீல் பாகவீ திரு.டேவிட், திரு. லூயிஸ் ரோசரியோ, திரு. கணேஷ் மதியழகன் ஆகியோர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர் திரு.பாலுச்சாமி, பொங்குதமிழ் மன்ற தலைவர் பொறியாளர் திரு. தமிழ்நாடன பாவலர் திரு. வித்யாசாகர், தொழிலதிபர் திரு. அல்மாஸ் முஸ்தாபா, பொறியாளர் திரு. இராஜசேகரன், பொறியாளர் திரு. ப.சேகர், பொறியாளர் திரு. சந்திரன், டிவிஎஸ் திரு.அலாவுதீன், திரு.கமலக்கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப்பொருள், முக்கணிகள் மற்றும் பழ‌ரசம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. மேலும் கலந்துகொண்ட‌ அனைவருக்கும் காலை உணவு மற்றும் தேனீர் வழங்கி உபசரிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரத்த வங்கியின் தலைமை மருத்துவர் இரத்தம் கொடுக்க இயலாமல் திரும்பிச் சென்றவர்களுக்காக வருத்தம் தெரிவித்தும், மன்றத்தாரின் இந்த நற்செயல்களை பாராட்டியும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நடந்து முடிந்த இரத்த தான முகாம் பற்றிய நிறை குறைகள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அனைவரது கருத்துக்களும் ஒருமித்திருந்தது வியப்பளித்தது. இறுதியாக மன்ற தலைவர் திரு. ஜெயபாலன் நன்றி கூற‌ முகாம் இனிதே நிறைவுற்றது.

No comments: