Wednesday, May 5, 2010

ஜிமெயிலில் கோப்புகளை இணைக்க புதிய வசதி


ஜிமெயிலை அறியாதவர்கள் இருக்க முடியாது.தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஈமெயில் ஜிமெயில் எனலாம்.ஜிமெயிலில் கணக்கு இல்லாதவர்கள் இல்லை எனும் நிலை உள்ளது.





ஜிமெயில் கணக்கில் 20MB கோப்புகளை இணைத்து அனுப்பலாம் என்பது அனைவரும் அறிந்ததே.கோப்புகளை இணைக்க ஜிமெயில் புது வசதியை தந்துள்ளது.இதற்க்கு முன்னர் கோப்புகளை இணைக்க அந்த கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்து இணைக்க வேண்டும்.ஆனால் தற்போது Drag and Drop வசதி மூலம் இணைக்கலாம்.அதாவது கோப்பை நமது மௌஸ் வைத்து தேர்வு செய்து இழுத்து கொண்டு வந்தாலே போதும்.இதற்க்கு வசதியாக முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க.இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும்.பின் இணைக்க வேண்டிய கோப்பை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும். கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க.

No comments: