Friday, April 23, 2010

காரைக்கால் த.மு.மு.க.வின் இருசக்கர சீருடை வாகன ஊர்வலம்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் களுக்கான 2.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை உடனே அமல் படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் மாவட்டம் தழுவிய இருசக்கர சீருடை வாகன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்திற்கு மாவட்ட துணை தலைவர் எஸ்.யூசுப்கான் தலைமை வகித்தார்.

காரைக்கால் மாவட்ட பொரு ளாளர் பி.ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் எச்.அப்துல் காசிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.லியாக்கத் அலி, புதுச்சேரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் கான் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட தொண்டரணி செய லாளர் முஹம்மது ஜியாவுதீன் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார், காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் தொடங்கப்பட்ட ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.சி. சிவக்குமார் தொடங்கி வைத்தார்.வாஞ்சூரில் தொடங்கிய ஊர்வலம் போலகம், திருபட்டினம், நிரவி, காரைக்கால், திருநள்ளார், சேத்தூர், அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கன்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி வழியாக 100 கிலோ மீட்டர் பயணம் செய்து காரைக்கால் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது, மாவட்ட செயலாளர் ஐ. அப்துல் ரஹீம், புதுச்சேரி மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக், கழக பேச்சாளர் எம்.முஹம்மது ஹாஜி ஃபிர்தவ்ஸி ஆகியோர் கோரிக்கை உரை நிகழ்த்தினர். முடிவில் நகர செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் நன்றி கூறினார்.

ஊர்வலத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.நியாஜ் அஹமது, நிர்வாகிகள் எம்.ஜலாலுதீன், முஹம்மது ஹாஜா அலாவுதீன், பாவா பஹ்ருதீன், சர்புதீன், முஹம்மது சபுருதீன், உட்பட நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனத்தில் கலந்து கொண்டனர்.த.மு.மு.க.வின் தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த 11-4-2010 அன்று சட்டசபையில் முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத தனி இடஒதுக்கீட்டு அரசாணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Thanks to Abdul Majeed"

No comments: