Monday, November 2, 2009

உங்கள் புரோட்பான்ட் இணைய வேகத்தை அறிவதற்கு...

மொபைல் போனை அடுத்ததாக சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தும் சாதனமாக இணையம் உருவாகியுள்ளது. அதிலும் புரோட்பான்ட் இணைப்பை இன்று பெரும்பாலும் அனைவருமே பயன்படுத்துகின்றனர் என்று சொல்வதில் தவறில்லை.

புரோட்பான்ட் இணைப்பில் பல வகை உண்டு. அதில் மொபைல் புரோட்பான்ட் ஆனது மிகவும் பிரபல்யம் பெற்ற ஒன்றாகும்.

இந்த புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும் போது பல விடயங்களை கவனிக்க வேண்டும். அதாவது இணைப்பின் வேகம், வாடகைக் கட்டணம், மொடம் என்று கூறப்படும் டொங்கானின் விலை, Coverage இன் நிலை போன்ற பல விடயங்களை கவனிக்க வேண்டும்.

சரி விடயத்திற்கு வருவோம், புரோட்பான்ட் இணைப்பின் வேகம் Mbps, Kbps போன்ற அளவுகளில் கணக்கிடப்படுகின்றன. புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும்போது இதன் வேகம் 1Mbps, 3.6 Mbps என்று கூறி விற்பனையாளர் விற்றுவிடுவார். பின்னர் இணையத்தில் மேயும்போது ஆமை வேகத்தில் பக்கங்கள் தோற்றுகின்றன எனப் புலம்புவதை விட புரோட்பான்ட் இணைப்பின் சரியான வேகத்தை அறிய கீழ்க் கண்ட வழிமுறைகளில் செல்லுங்கள்.



உங்களின் இணைப்பு எந்த வேகத்தில் செல்கின்றது, எத்தனை எம்.பி. பைலை எத்தனை நிமிடங்களில் பதிவிறக்கிக் கொள்ள முடியும் போன்ற பல பயனுள்ள தகவல்களை இந்த தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள தளத்திற்குச் சென்று Begin Testஎன்பதை சொடுக்கியதும் மீற்றர் அமைப்பு போன்ற ஒரு தொகுதி ஓடிக்கொண்டிருக்கும்.ஓரிரு நிமிடங்களின் பின்னர் உங்களின் இணைப்பு வேகங்கள் அடங்கிய தரவுகள் காண்பிக்கப்படும்.இதிலிருந்து உங்களின் சேவை வழங்குநரினால் குறிப்பிடப்பட்ட வேகத்தில் இணையம் தொழிற்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளமுடியும்.

தள முகவரி :
http://www.speedtest.net/

No comments: