Wednesday, September 23, 2009

Wireless Technology - BSNL

சென்னை, செப்.19: உடனடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வயர்லெஸ் டெக்னாலஜி என்ற சான்றிதழ் படிப்பை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடப்படும் இந்த புதிய படிப்பு டிசம்பர் தொடங்கப்படவுள்ளது.

வயர்லெஸ் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு தொடங்குவது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட தலைமை பொதுமேலாளரும், சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளருமான டி.வரதராஜன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மைய முதல்வர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.


இதன்படி இரு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து வயர்லெஸ் டெக்னாலஜியில் 2 வார கால சான்றிதழ் படிப்பை வழங்கும்.

இந்த படிப்பில், செல்போன் ஜி.எஸ்.எம். டெக்னாலஜி, சி.டி.எம்.ஏ., வைபி, வைமாக்ஸ் உள்பட வயர்லெஸ் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அனைத்து பாடங்களும், செல்போன் தொழிëல்நுட்பங்கள் குறித்தும் சொல்லித்தரப்படும். இதற்கான தியரி மற்றும் செய்முறை பயிற்சி வகுப்புகள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்திலும் குரோம்பேட்டையில் இருக்கும் எம்.ஐ.டி. கல்லூரியிலும் நடைபெறும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகமும், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து சான்றிதழ் வழங்கும். முதல் வகுப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை முன்னணி நாளிதழிகளில் வெளியாகும். மேலும், இதுபற்றிய அறிவிப்புகள் பி.எஸ்.என்..எல். தமிழ்நாடு வட்ட இணையதளமான
http://tamilnadu.bsnl.co.in -ல் வெளியிடப்படும் என்று பி.எஸ்.என்.எல். நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: