Tuesday, January 3, 2012

குவைத் தமிழ் மாத இதழ் 7ஆம் ஆண்டு துவக்க விழா.






குவைத் தமிழ் 7-ம் ஆண்டு துவக்க விழா
( அரபு உலகின் முதல் தமிழ் இதழ் )

30-12-2011 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் டீச்சர் சொசயிட்டிஹால் தஸ்மா

குவைத் தமிழ் 7-ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

குவைத் தமிழ் பத்திரிக்கை ஆலோசகர் நாசர் ரப்பானி அவர்கள் கிராஆத் ( திருமறைவசனம் ) ஒதி விழாவை தொடங்கி வைத்தார்.

தமிழ் பத்திரிக்கை நிறுவனர் K. லுக்மான் சித்திக் அவர்கள் தனது வரவேற்புரையில்.. தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு பேச்சாளர்களையும், குவைத் வாழ் தமிழ் பொது மக்கள், வர்த்தக பெருமக்கள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோரை பொங்கு தமிழில் வரவேற்றார்.

கருத்துரை வழங்கிய கம்பளிபஷீர் அவர்கள் இப்பத்திரிக்கையின் தொடர்வளர்ச்சிக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வர வேண்டும் என கேட்டுகொண்டார்.

TVS குழுமம் மேலாளர் அலாவுதின் அவர்கள், தாயகத்திலிருந்து வருகை புரிந்த முக்கிய பேச்சாளர்களை வரவேற்று மேடையில் அமர செய்தார்.

தொடர்ந்து, குடிசைகள் எப்போது கோபுரங்களாகும்? (கவிதைகள்) எனும் நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரிநாரயணன் Ex.MLA. வெளியிட முக்கிய விருந்தினர்கள் TKS. இளங்கோவன் M.P., பேராசிரியர்அப்துல்லாஹ், பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர்க்கு குவைத் தமிழ் பத்திரிக்கையின் இணையாசிரியர் அறிவிகவிஞர் ஆனந்தரவி அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்

(கவிதைகள்) நூல் குறித்த தனது கருத்துரையில், மிகசிலாகித்து, பாராட்டி வாழ்த்தி பேசினார். தமிலோசை மன்றத்தின் புரவலர் அல் அவ்தா கார்பெண்ட் தொழிலதிபர் சாதிக் அவர்கள்
தொடர்ந்து, குவைத் தமிழ் பத்திரிக்கை குழுமத்தினரால் முக்கிய விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட்டனர்.

பத்திரிக்கை ஆசிரியர். A.அப்துல்கனி (ஜானி) அவர்கள் அழைப்பு விடுக்க “சமூக புரட்சி ” என்ற தலைப்பில் அச்சரப்பாக்கம் சட்ட்மன்ற உறுப்பினர் சங்கரி நாரயணனன் Ex.MLA பேரீய விளக்க உரையாற்றினார்

குவைத் தமிழ் பத்திரிக்கைவெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் TKS. இளங்கோவன் M.P. அவர்கள். முக்கியவிருந்தினர்கள் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து,வர்த்தக பெருமக்களுக்கும்,ஸ்பான்சர்களுக்கும் நினைவு பேழைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து,“தொண்டுச் செம்மல்”எனும் பட்டத்தையும் உடன் அதற்க்கான நினைவுபேழையையும் கம்பளி A.M.பஷீர் அவர்களுக்கு TKS. இளங்கோவன் M.P., பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ், ஆகியோர் இணைந்து வழங்கி கெளரவித்தனர்.

“இயக்கங்கள்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் TKS. இளங்கோவன் M.P. சிறைப்புரையாற்றினார்.

“தொலைகாட்சி ஊடகம் இன்றைய நிலையில் அவசியமா ?” குறித்த தலைப்பில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்கள் பேரூரையாற்றினார்.

முன்னதாக காரைக்கால் S.M. ஆஃரிப் மரைக்காயர் அவர்கள்,வருகை புரிந்த அணைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, மக்கள் தொடர்பாளர் M.செளக்கத் அலி அழைக்க “ஒற்றுமை”எனும் தலைப்பில் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ், அவர்கள் நீண்ட நிறைவுரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியினை தனேக்கே உரித்தான எழில் கொஞ்சும் தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கி குவைத் தமிழ் பத்திரிக்கை விழாவுக்கு சிறப்பு சேர்த்து உதவினார் சகோதரர் விட்டுக்கட்டி எம்.எஸ்.எச். மஸ்தான் அவர்கள்,

இந்நிகழ்வு சிறப்பு சேர்க்கும் வகையில் ஊடகசெய்தி வெளீயிடு மற்றும் புகைப்படத்தொகுப்புக்கு, பெரிதும் உதவினர் S.M. ஆஃரிப் மரைக்காயர் அவர்கள்

இச்சிறப்பு நிகழ்வுக்கு மார்க்க மற்றும் சமுதாயநல அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள்,வர்த்தக பெருமக்கள், சமூக நல ஆர்வலர்கள், பொது மக்கள் மிக திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

http://www.facebook.com/media/set/?set=a.279386942110005.63155.100001161044568&type=1

No comments: