Friday, December 30, 2011
குவைத்தமிழ்7-ம்ஆண்டுதுவக்க (முன்னோட்ட) வரவேற்புநிகழ்வு: :
Kuwait Tamil Chief Guest Professor Dr. Abdullah, Professor Subaverapandian,
T.K.S. Elangovan M.A. M.P. Member of Parliament & Shankari Narayanan M.A.,
Acharapakkam Ex, M.L.A., Reception was held on 29/12/2011 @ Anjappar Restaurant Farwaniya Kuwait @ 8.30PM.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
குவைத்தமிழ்7-ம்ஆண்டுதுவக்க(முன்னோட்ட)வரவேற்புநிகழ்வு:
29-12-2011 வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் ஆஞ்சப்பர் செட்டிநாடு ரெஸ்டாரண்ட் ( ஃபர்வானியா ) யில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வுக்கு TMCA பேரவை தலைவர்,மற்றும் சமுதாயநல அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள், வர்த்தக பெருமக்கள், சமூக நல ஆர்வலர்கள், முன்னிலை வகித்தனர்.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர்ட். A.அப்துல்கனி (ஜானி) அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் TKS. இளங்கோவன் M.P. அவர்களுக்கு,பூங்கொத்து வழங்கி கெளரவித்து முன்னிருக்கையில் அமரவைத்தார்.தொடர்ந்து,பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு, TMCA பேரவை தலைவர் ஆவூர் A. பஷீர் அஹமது அவர்களும், குவைத் தமிழ் மக்கள் தொடர்பாளர் M.செளக்கத் அலி அவர்கள்,பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு, குவைத் தமிழ் பத்திரிக்கை நிறுவனர்& வடிவமைப்பபாளர்K. லுக்மான் அவர்கள், அச்சரப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரிநாரயணன் Ex.MLA. ஆகியோர்க்கும் பூங்கொத்து வழங்கி கெளரவித்து முன்னிருக்கையில் அமரவைத்தனர்.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆலோசகர் நாசர் ரப்பானி அவர்கள் கிராஆத்( திருமறைவசனம் ) ஒதி தொடங்கி வைத்தார். குவைத் தமிழ் பத்திரிக்கை நிறுவனர் K. லுக்மான் சித்திக்அவர்கள் தனது வரவேற்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சிறப்பு பேச்சாளர்களையும் ஏனைய அழைப்பாளர் களையும் உவகைப் பொங்க வரவேற்றார்.
வருகை புரிந்த முக்கிய சிறப்பு பேச்சாளர்கள் நால்வரும், தங்களது கருத்துரையின் போது, குவைத் தமிழ் பத்திரிக்கை அரபுலகின் முதல் தமிழ் இதழாக துவங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக வெளியிட்டு வருவதுடன் குவைத் தமிழ் பேசும் மக்களிடையே நல்ல தமிழ்உணர்வுகளை பதித்து,தமிழக நன்னெறி செய்திகளுடன் ‘குவைத் தமிழ்’ தாங்கி வருவதையும் அதற்கு காரணமான நிர்வாகிகளை மனம் திறந்து வெகுவாக பாராட்டியதுடன்,தங்களது வாழ்த்துக்களை முன்னதாக தெரிவித்துக்கொண்டும், இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள வர்த்தக நிறுவனத்தார்கள், வாசகர்கபெருமக்கள் பெரிதும் தங்களது ஒத்துழைப்பினை இப் பத்திரிக்கைக்கு தொடர்ந்து
வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
குவைத் தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் A. அப்துல்கனி (ஜானி) அனைவருக்கும் நன்றி கூறினார். மக்கள் தொடர்பாளர் M.செளக்கத் அலி அவர்கள் மஜ்லிஸ் துஆ செய்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
இவ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சிறப்பு சேர்த்து உதவினார்கம்பளி A.M.பஷிர்அவர்கள், இரவு உணவு உபசரிப்புக்கு பின்னர் இம்முன்னோட்ட நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
நன்றிக்கு உரியவகையில், இவ் நிகழ்ச்சியினைசிறப்பாக ஏற்பாடு செய்து உதவினார் குவைத் தமிழ் பத்திரிக்கையின் இணையாசிரியர் அறிவுக்கவி ஆனந்தரவி அவர்கள். இந்நிகழ்வு சிறப்பு சேர்க்கும் வகையில் செய்தி மற்றும் புகைப்படத்தொகுப்புக்கு, பெரிதும் உதவினர் TMCA செய்தி தொடர்பாளர் காரைக்கால் S.M. ஆஃரிப்மரைக்காயர் அவர்கள் மற்றும் TMCA பொருளாளர் சுவாமிமலை H.ஜாஹீர் ஹூசைன் அவர்கள்..
http://www.facebook.com/media/set/?set=a.278836995498333.62983.100001161044568&type=3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment