Thursday, November 3, 2011

குவைத்தில் புனித ஹஜ் / அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் & போட்டிகள்

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..


குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும் புனித ஹஜ் / அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...


நாள்:


03.11.2011 வியாழக்கிழமை (ஹஜ் பிறை 8) முதல் 05.11.2011 சனிக்கிழமை (ஹஜ் பிறை 10) வரை தொடர்ந்து மூன்று நாட்கள்


நேரம்:


தினந்தோறும் இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து...


இடம்:


K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,
ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.


நிகழ இருப்பவை:
சிந்தைக்கினிய சிறப்பு சொற்பாழிவுகள்
இன்று ஒரு இஸ்லாமியத் தகவல்
இஸ்லாமிய பொது அறிவு வினாடி வினா
வாரந்தோறும் வசந்தம் போட்டி
குழந்தைகளுக்கான திருக்குர்ஆன் மனப்பாட போட்டி
திக்ரு மஜ்லிஸ்
துஆ மன்றம்
சிறப்பு நிகழ்ச்சிகளின் கருப்பொருள்:
புனித ஹஜ் / அரஃபா நோன்பு / பெருநாள் / தியாக வரலாறு / குர்பானி / ஜியாரத்துன் நபி (ஸல்)
சிறப்புரைகளை நிகழ்த்துவோர்:
குவைத் வாழ் ஆலிம் / அறிஞர் பெருமக்கள்
புனித ஹஜ் சிறப்பு போட்டிகள்:
வாரந்தோறும் வசந்தம் போட்டி
நமது K-Tic பள்ளிவாசலில் நடைபெறும் வாரந்தோறும் வசந்தம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற 7 துஆக்கள் போட்டியில் இடம்பெறும்.
குவைத் வாழ் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு கிடையாது.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
சரியாக விடையளிக்கும் ஆண்களில் மூன்று பேருக்கும், பெண்களில் மூன்று பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
இதுவரை வெளியான வாரந்தோறும் வசந்தம் தொகுப்பை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
2. திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி
6 வயது வரை திருக்குர்ஆனின் கடைசி பத்து ஸூராக்கள் (ஸூரா அல் ஃபீல் (105) முதல் ஸூரா அன் நாஸ் (114) வரை)
7 முதல் 12 வயது வரை திருக்குர்ஆனின் கடைசி இருபது ஸூராக்கள் (ஸூரா அத் தீன் (95) முதல் ஸூரா அன் நாஸ் (114) வரை)
குவைத் வாழ் ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களில் மூன்று பேருக்கும், பெண்களில் மூன்று பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
குறிப்பு:
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும்.
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
அனைவரும் குடும்பத்துடன் வருக!
அன்பர்களையும் அழைத்து வருக!!
அளவிலா அறிவமுதம் பெ(ப)ருக!!!


மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:


துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82










No comments: