
காரைக்கால், அக்.10 உலக மனநல தினத்தை முன்னிட்டு, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து மனநல விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தியது.
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற இந்த மனநல விழிப்புணர்வு கண்காட்சிக்கு தனியார் மருத்துவக்கல்லூரியின் செவிலியர் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் சசிகாந்தாஸ் கண்காட்சியை துவக்கி வைத்தார். விரிவுரையாளர்கள் சரவணன், ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கண்காட்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
கண்காட்சியில், மனநலம் பற்றிய முழுவிபரம், மனநலவாதிகளை பேணிகாக்கும் முறைகள், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து விடும்படும் வழிமுறைகள், ஆளுமைத் திறணை மேம்படுத்துதல், தற்கொலைகளில் இருந்து மீள்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விளக்கம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment