Monday, May 30, 2011

2011-2012 புதியநிர்வாகிகள் அறிமுகம், 2007-2010-ஆண்டு வரவு செலவு கணக்கு அறிக்கை மலர் வெளியீடு மற்றும் அல்இஹ்ஸான் இணையதள துவக்கம் நிகழ்வுகள்







கடந்த 27-05-2011 வெள்ளிக்கிழமை இரவு 8:15 மணியளவில் மன்னுசல்வா (முர்காப்) ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வுக்கு சங்க தலைவர் ஜனாப். கான்லெப்பை R. M.அப்துல்காதர் ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார்.

கொட்டபாக்கி லக்கி ஜனாப். A. சுலைமான் பாட்சா ( தலைவர், அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத், குவைத்) ஜனாப். வயத்துபூனை D.M. ஜஃபருல்லாஹ் (துணைத் தலைவர், அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத், குவைத்), சங்க ஆலோசகர் ஜனாப். வடகாலன் A. ரகுமான் பாட்சா ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்

கல்விக்குழு ஆலோசகர் K.P.S. முனீர் அஹமது M. A. அவர்கள் கிராஅத் (திருமறைவசனம்) ஒதி தொடங்கி வைத்தார்.

சங்க ஒருங்கிணைப்பாளர் குண்டு அப்துல் கனி ( ஜானி ) அவர்கள் தனது வரவேற்புரையில் சங்க சேவைகளை நினைவு கூர்ந்தார்.

சங்க முன்னாள் தலைவர் & ஆர்கனைசர் ஜனாப் A.மைதின்பாட்சா அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வு அறிமுகம் & பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சங்க தலைமை ஆர்கனைசர் ஜனாப். கம்பளிபஷிர்அவர்கள் 30 ஆண்டு சங்க சேவைகளை பட்டியலிட்டு நிர்வாகிகளை வாழ்த்தி அறிவுரை வழங்கினார்.

எதிர்கால கல்விச்சேவை திட்டம் குறித்த விளக்க பட்டியலை சங்க துணைத் தலைவர் ஜனாப். புதுலெப்பை A.சையத் அஹமதுராஜா அவர்கள் விரிவாக விளக்கமளித்தார்.

அல்இஹ்ஸான் சங்க (www.alihshan.com) இணையதளம் நிகழ்வினை ஜனாப். லக்கி A.சுலைமான்பாட்சா அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்.

சங்க பொதுச்செயலாளர் ஜனாப். மாமராவுத்த D.M. அஷ்ரப்அலி அவர்கள் “அல்இஹ்ஸான் இணையதளம்” ஒரு முன்னோட்ட விளக்கவுரை வழங்கினார், மேலும் இணையதளம் ஆக்கம் பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்த ஜனாப். முஹம்மது காஜா (கொடைக்கானல்) அவர்களுக்கும், இணையதள பணியில் உறுதுணையாக இருந்தும், இம்முன்னோட்ட நிகழ்வுக்கும் உதவிய ஜனாப். ஜாஹிர் ஹுசைன் (புதுக்கோட்டை)அவர்களுக்கும், பொதுச்செயலாளர் நன்றிதனை தெரிவித்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, சங்க தலைவர், ஜமாஅத் சபை தலைவருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

ஜமாஅத் சபை துணை தலைவர். D.M. ஜஃபருல்லாஹ் அவர்கள் சங்கசேவைகளை பெரிதும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

“வரவு செலவு அறிக்கை & நிர்வாக அறிமுக” மலரை சங்க பொருளாளர் ஜனாப். சலாரி S. ஜாபர் சாதிக் அவர்கள் வெளியிட்டு இச்சிறப்பு நிகழ்வு முன்னிலையாளர்களுக்கும், வருகை புரிந்தோர்க்கும் வழங்கினார்.

சங்க இணைச்செயலாளர் ஜனாப். மணியாலி M.செளக்கத்அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியுரை கூறினார்.

சங்க ஆலோசகர் ஜனாப் . ஈயாக்கார R. அக்பர் பாட்சா துஆ செய்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

அனைத்து நிகழ்வினையும் சங்க பொதுச்செயலாளர் D.M. அஷ்ரப்அலி அவர்கள் தொகுத்து வழங்கி சிறப்பு சேர்த்து உதவினார்.

இரவு உணவு ஏற்பாட்டுக்கு பின்னர் கூட்டம் இனிதே முடிவுற்றது.

குறிப்பு : செய்தி தொகுப்பு,மற்றும் புகைபட உதவிபுரிந்த காரைக்கால் ஜனாப். S.M.ஆரிப்மரைக்காயர், சுவாமிமலை ஜனாப் H. கமால்பாட்சாஆகியோர்களுக்கும், இணையதள ஆக்கப்பணியில் பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய சங்க ஊர் பிரதிநிதி ஆலிமான் ஜனாப். R.M. ஜியாவுதின் அவர்களுக்கும் சங்க நிர்வாகம் மிக நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறது.


http://www.facebook.com/media/set/?set=a.185629718152395.44025.100001161044568&l=30917d8024

No comments: