Tuesday, March 8, 2011

மார்ச்-8 மகளிர் தினம் . இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள்!





இஸ்லாம் மகளிருக்கு வழங்கிய உரிமைகள்!


உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்8.ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆங்காங்கே நடைபெறும். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் பெண்கள் சுதந்திரம்குறித்த தெளிவான பார்வையின்மைதான்.


பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என்ற வெறியூட்டப்பட்டு, ஆண்களுக்கு நிகரான ஏன் அதையும் தாண்டிய குறைந்த அளவு ஆடையில் வலம்வருவது, பணிக்கு செல்வது இவை மட்டும்தான் பெண்களின் முன்னேற்றம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்றதுதான். இதையும்தாண்டி பெண்கள் சோபிக்கவேண்டிய முக்கியமான குடும்பக்கட்டமைப்பு இன்று பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் சிதைந்துள்ளது.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது அரிதான ஒன்றாக இருந்தது. இன்று என்ன நிலை? ஒரு சிறு பிரச்சினை என்றாலும் கணவனுக்கு முன்பாக குடும்பநல நீதிமன்றத்தின் படியேறுவது பெண்தான். இதை பெருகிவரும் விவாகரத்து வழக்குகள் உறுதிப்படுத்துகிறது. சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டுமே இவ்வளவு எனில், ஏனைய மாவட்டங்கள்- மாநிலங்களின் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த அளவுக்கு விவாகரத்து மலிந்ததற்கு ஆண்கள் ஒரு காரணம். ஆனால் ஆண்கள் மட்டுமே காரணமில்லை. சுதந்திரம் என்ற பெயரில் கணவன் திட்டினாலே, அவனை கம்பி எண்ண வைக்கும் மனைவிகள் உண்டு. 'அடிமைத்தளையை அறுக்கிறேன் என்றபெயரில் அன்பான குடும்பத்தின் குரல்வளையை அறுக்கவைத்ததும் இந்த போலிபெண் சுதந்திரமே! அதுபோன்று சரிநிகர்சமானம் என்ற பெயரில், குடும்பப்பொறுப்புகளையும், குழந்தைகள் பராமரிப்பையும் புறந்தள்ளி பணிக்கு செல்லும் பெண்களில் சிலர் தாமும் சம்பாதிப்பதால் கணவனுக்கும், ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் மரியாதை தரமறுப்பதும்அதனால் பிரச்சினைகள் எழுவதையும் முடிவில் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆட்கள் அணிந்து வலம்வரும் சில பெண்களால் நாட்டில் கற்பழிப்பு எண்ணிக்கை அதிகமாவதையும் நாம் மறுக்கமுடியாது. கற்பழிக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு செயல்படுபவரைவிட, சில பெண்கள் அணியும் ஆடைகளால் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நடக்கும் கற்பழிப்புகளே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நம்நாட்டில் சுமார் இருபதாயிரம் கற்பழிப்புகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சுதந்திரம் என்ற பெயரில், ஆண்களுடன் பணியாற்றுவதாலும், ஆண்களுடன் சுற்றுவதாலும் காதல்வயப்பட்டு கற்பிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்கா. இப்படி சுதந்திரம் என்றபெயரில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் பெண்ணினத்திற்கு, இஸ்லாம் உண்மையான சுதந்திரத்தையும்- பாதுகாப்பையும் வழங்கியிருக்கிறது.

பிறப்பதற்கு உரிமை;
கணினி உலகிலும் கருவிலேயே பெண்குழந்தையை அழிக்கும் நிலையில், அன்றே பெண் குழந்தைகளை சிறப்பித்து வரவேற்ற மார்க்கம் இஸ்லாம்;இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.
நூல்;புஹாரி,எண் 2408

கல்வி கற்பதில் சுதந்திரம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நூல்;புஹாரி,எண் 101;

மணமகனை தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம்;

கன்சா(ரழி)அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)


விவாகரத்தில் உரிமை;

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 5273

இது போக கணவனின் சொத்தில் உரிமை, தந்தையின் சொத்தில் உரிமை இப்படி ஏராளமான உரிமைகளையும், உண்மையான சுதந்திரத்தையும் வழங்கியதோடு, இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியது போன்று ஒரு பெண்ணைத்தான் முஸ்லிம்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லிக்காட்டி பெண்ணினத்தை உச்சத்தில் வைத்து பாராட்டுகிறான்;

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (66:11)

நன்றி : http://www.sengiskhanonline.com/

No comments: