Thursday, August 19, 2010

ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள-spelling made easy

ஆங்கிலத்தில் நாம் புலமை பெற்றிருக்கலாம். ஆனால் இலக்கணம் என்று வரும்போது சற்று தடுமாறவே செய்யும்.ஒரு எழுத்தை மாற்றிபோட்டாலும் அர்த்தம் அனந்தமாகிவிடும். 9 லிருந்து 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் அடிப்படை ஆங்கில அறிவை வளர்ப்பதாக உள்ளது. 250 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பால்மாறாமல்(சோம்பல்படாமல்) பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். எம்.பி. அளவு அதிகமாக உள்ளதால் நான் இதன் டோரண்ட் பைலின் லிங்க் இங்கு இணைத்துள்ளேன். நீஙகள் பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதனை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




அடுத்த சில நொடிகளில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையானதை நீங்கள் கிளிக் செய்யவும்.


நான் Doubling letters கிளிக் செய்துள்ளேன். அவர்கள் சொல்லும் வார்ததையை நாம் காதால் கேட்டு கீழே உள்ள பாக்ஸில் தட்டச்சு செய்யவேண்டும். சரியான விடை கடைசியில் வரும்.


இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அதன் பிரிவுகள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

No comments: