Thursday, February 4, 2010

ஐபோன்/ஐபேடில் அழகு தமிழ்


இந்த மாதிரியாக கரிஷ்மாட்டிக் லுக் கொண்ட ஒரு நபர் இப்போதைக்கு டெக் இண்டஸ்ட்ரியில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும் போது ஒலிக்கும் கரகோசம் போல, இவர் மேடையில் தோன்றினாலும் அரங்கமே அதிரும். தனது பிராண்டுக்கென ஒரு விசிறி பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் தும்மினால் என்னமோ ஏதோவென பங்குகள் சரியும், அதெல்லாம் ஒன்றுமில்லை என தகவல் வந்தால் மீண்டும் விறுவெறுவென ஏறும். இப்படி ஒரு தனிநபரையே நம்பி கொண்டாடி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றது ஆப்பிள் நிறுவனம்.

இரண்டாயிரத்து எட்டில், நமது ஐபோன் அறிமுக பதிவில் “கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.” என குறிப்பிட்டிருந்தேன். இப்போது இரண்டு வருடம் கழித்து ஐபேட் எனும் பெயரில் அதை வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்டீவ் ஜாப்சின் இன்னொரு மைல் கல். ஆப்பிள் காட்டில் மீண்டும் மழை பொழியலாம்.




ஆப்பிள் காட்டில் மழைபொழிகின்றதோ இல்லையோ, ”IT குடிசைத்தொழில்” சமூகம் சந்தோசத்திலிருக்கின்றது. கடவுளே இந்த iPad-வெற்றி பெறவேண்டுமே என வேண்டுகின்றது. இதன் மூலம் iPad சம்பந்தப்பட்ட அநேக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக, அதற்கு accessories தயாரிப்பது, பயன்பாடுகள் தயாரிப்பது, அதை ரிப்பேர் செய்வது என இந்த ஒரு புராடெக்ட் மூலம் இன்னொரு ஆயிரம் ஜாப்ஸ் (வேலைவாய்ப்புகள்) உருவாக ஸ்டீவ் ஜாப்ஸ் காரணமாகயிருந்தால் அவரை ஹீரோவாக கொண்டாடுவதிலிருக்கும் நியாயம் புரியும். ஐநூறு டாலரிலிருந்து வரவிருக்கின்றதாம். வந்ததும் பக்கத்திலிருக்கும் ஆப்பிள் ஸ்டோர் போய் இதெல்லாம் நமக்குத் தேவையாவென தொட்டுப் பார்க்கவேண்டும்.

ஐபேட் SDK வெளியிடப்பட்டிருந்தாலும் அனைத்து ஐபோன் பயன்பாடுகளும் இதில் வேலைசெய்யும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐபோனில் தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன என முன்பு தெரிவித்திருந்தேன். அதை ஆப்பிள் இன்னும் சரிசெய்தது போல தெரியவில்லை. ஆனாலும் நமது மலேசியா வாழ் நண்பர்கள், கல்லையும் செல்லாக்குபவர்கள், செல்லினம் (Sellinam) எனும் ஒரு இலவச பயன்பாடை வெளியிட்டு, அதன் வழி தமிழை ஐபோனில் அழகாக்கி கொடுத்திருக்கின்றார்கள். நீங்கள் செல்லினம் எனும் இந்த ஐபோன் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அதன் வழி தமிழை சுலபமாக பார்க்கலாம்.(படம்) பிடித்தமான தமிழ் RSS Feed-களையும் சேகரித்து போகும் போக்கில் படிக்கலாம். http://sellinam.com/ குழுவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துதல்களும்
.

No comments: