Sunday, January 24, 2010

‘FIMA’ பொருளாளராக M. முனீர் அஹமது தேர்வு!

FIMA(FEDERATION OF INDIAN MUSLIMASSOCIATIONS-இந்திய இஸ்லாமிய கூட்டமைப்பு) வின் புதிய பொருளாளராக தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் M. முனீர் அஹமதுஅவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

FIMA வின் புதிய நிவாகிகள் தேர்வு22/01/2010 அன்று ரவ்தா ஜமியத்துல் இஸ்லாஹ் அரங்கில் நடைபெற்றது. TMCA தலைவர் அல்மாஸ் முஸ்தபா, TMCA முன்னால் தலைவர் M.A.J. முஹம்மதுஇக்பால், பொதுச்செயலாளர் N.A.M. அப்துல் அலீம் உள்பட பல்வேறு மாநிலஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். FIMA என்பது குவைத்திலுள்ள 14 மாநிலஇஸ்லாமிய இயக்கங்களை ஒன்றிணைத்த பேரமைப்பாகும் இவ்வமைப்பில், குவைத் தமிழகமுஸ்லிம்களின் பிரதிநிதியாக இடம்பெற்றுள்ள ஒரே அமைப்பு TMCA, தமிழ்நாடுமுஸ்லிம் கலாச்சார பேரவை மட்டுமே! TMCA வின் மிக முக்கிய பங்களிப்பைகருத்தில் கொண்டு FIMA நிர்வாகிகள், TMCA பொறுப்பாளர்கள் FIMA வின் புதியநிர்வாக குழுவில் இடம்பெற வேண்டுமென நீண்ட நாட்களாய் கோரி வந்தனர்.அதனடிப்படையில் TMCA நிர்வாக குழுவில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு TMCAபிரதிநிதிகளாக FIMA விற்கு TMCA வின் முன்னால் தலைவர் M.A.J. இக்பால்அவர்களையும், துணைப் பொதுச்செயலாளர் M. முனீர் அஹமது அவர்களையும்நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில்,FIMA பொருளாளராக M. முனீர் அஹமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.சகோதரர் முனீர், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் M.A. அரபிக் பட்டம்பெற்றவராவார். TMCA பணியில் பல்வேறு ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்.தற்போது டாக்டர் (Ph.d) பட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் "Contribution of the AlSabah Dynasty for the development ofArabic language & litreature" (அரபிக் மற்றும் இலக்கிய துறையில்அல்சபாஹ் குடும்பத்தினரின் பங்களிப்பு) எனும் தலைப்பில் ஆராய்ச்சியில்ஈடுபட்டுள்ளார். அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜாமியா மஸ்ஜிதில்பேஷ்-இமாமாக பன்னெடுங்காலம் பணியாற்றிய மறைந்த மார்க்க அறிஞர் அல்ஹாஜ்K.P.S. முஹம்மது முஸ்தபா அவர்களின் மூத்த புதல்வர் முனீர் ஆவார்.சமூகங்களிடையே ஒருங்கிணைப்பு,, கண்ணியமான பேச்சாற்றல், இடைவிடாதமார்க்கப்பணி, இவற்றின் அணிகலனாக முனீர் அஹமது திகழ்வது இவரின் பொருத்தமானபங்களிப்பாகும் என TMCA நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments: