Thursday, May 14, 2009

SHAREPOINT DESIGNER 2007 IS NOW FREE!

Microsoft Frontpage -இன் புதிய வடிவமான Microsoft Sharepoint Designer 2007 இலவசமாக பெறுவது தொடர்பான பதிவு இது.
இணைய பக்கங்களை வடிவமைப்பதற்கு Microsoft Frontpage உபயோகித்து பார்த்திராதவர்கள் மிக குறைவாகவே இருப்பர். மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 வெளியீட்டின் போது அதனை Frontpage ஐ மேம்படுத்தி Sharepoint Designer 2007 என்று வெளியிட்டார்கள். அது ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இருநூறு டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. இப்போது Microsoft Sharepoint 2007 இலவசமாக மைக்ரோசாப்ட் வழங்குகிறது. நல்ல விஷயம்தான்.அதனை தரவிறக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். தோன்றுகின்ற பக்கத்தில் "Registration Required for This Download" என்று உங்களை பதிவு செய்ய சொல்லும்.
பதிவு செய்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் அளிக்கும் மின்னஞ்சல் முவரிக்கு Verfication மின்னஞ்சல் அனுப்புவார்கள். அந்த மின்னஞ்சலில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சென்றால் நீங்கள் தரவிறக்கம் செய்வதற்கான பக்கம் தோன்றும்.
தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்த கோப்பு SharePointDesigner. exe என்ற பெயரில் 295.89 MB என்ற அளவில் இருக்கும். அதனை இன்ஸ்டால் செய்து உபயோகப்படுத்தி பாருங்கள்.
இந்த மென்பொருள் இணைய வடிவமைப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். Microsoft Sharepoint குழுவினருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

No comments: